திமுகவுடன் கூட்டணி அமைத்ததும், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இணைந்துகொண்டார். தொடர்ந்து, “தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என தெரிவித்திருந்தார்.