சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரது உருவப்படத்தை கட்டித் தழுவி கண்ணீர் மல்க ஆசீர்வாதம் பெற்றார். இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்த தேமுதிக நிர்வாகிகள், இந்த உணர்ச்சி தருணம் திமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் வெற்றியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.