கோயில் கட்டித் தருவதாக பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி

28பார்த்தது
கோயில் கட்டித் தருவதாக பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி, தொப்பலிகுப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது கிராம பெண்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கோயில் கட்டித்தருவதாக பிரேமலதா விஜயகாந்த் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி