தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இதில், ரேஷனுக்கு மட்டும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதன்படி, ‘மளிகை கடைகளில் விற்கப்படும் அரிசி போல, அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படும்’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ‘எண்ணெய், பருப்புகள் விலையில்லாமல் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.