சர்வதேச சந்தையில் எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான்காவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலையேற்றம் என்பது காய்கறி, பழங்கள் தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், ஹோட்டல்களில் உணவுகள் விலையும் அதிகரிக்கும் என்கின்றனர்.