சென்னை பள்ளிக்கரணைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு ஆதிபுரீஸ்வரர் கோயில் பூசாரி அசோக் பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை தீர ருத்ராட்சம் மாலை வாங்கி தருவதாக அப்பெண்ணை அசோக் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பெண்ணின் கணவர், பின்தொடர்ந்து சென்று அசோக் உடன் இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் அசோக் மற்றும் தனது கணவர் மீதும் போலீசில் புகாரளித்துள்ளார்.