மதுரைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது புதிய ரயில் பாதையை அவர் திறந்து வைத்தார். மேலும், கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய நகரங்களில் புதிய 'ஆகாஷ்வாணி' பண்பலை சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.