கோவையில் இன்று (நவ.19) நடைபெற்று வரும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது புட்டபர்த்தியில் நடந்த விழாவில் பங்கேற்றுவிட்டு கோவை வரத் தாமதமானதற்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், விவசாய சங்க தலைவர் பாண்டியன் ஆற்றிய உரையை இந்தியில் அனுப்புமாறு ஆளுநரிடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.