பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி பட்டம் தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவை, டெல்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடி உட்பட பலரின் பட்டங்கள் குறித்த விவரங்களை நீராஜ் என்ற நபர் கோரியிருந்தார். அதை ஏற்று CIC, தகவலை வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இதை நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.