“பாண்டிய நாட்டைத் தொடர்ந்து சோழ வள நாட்டிற்கு பிரதமர் மோடி வந்துள்ளார்” என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் நடந்துவரும் NDA நிகழ்ச்சியில் பேசிய அவர், “குஜராத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்தது. வேளிர்கள் ஆண்ட குஜராத்தில் இருந்து திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும் பிரதமர் மோடி குஜராத்தைச் சேர்ந்தவர்” என்றார்.