பிரதமர் மோடி வரும் பிப்.16-ம் தேதி புதுச்சேரிக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கும் அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.