இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

8பார்த்தது
இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை
புதுச்சேரி, அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இளைய தலைமுறையினருக்கும், பெண் வாக்காளர்களுக்கும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்றும், அசாம் மக்கள் பெருமளவில் பங்கேற்று ஜனநாயகக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்றும், கேரள மக்கள் சாதனை அளவிலான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி