நாகர்கோவில் சிறையில் விசாரணைக்கைதியான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த மரணம் தொடர்பாக நேசமணிநகர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில், சிறை தலைமை வார்டன் ஜெகன் மற்றும் வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.