தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்கக்கோரி தனியார் பேருந்துகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதுகுறித்த விசாரணையில், கட்டண உயர்வு குறித்து டிச.30 ஆம் தேதிக்குள் முடிவு எட்டப்படுவடவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தொடர்ந்து, அடுத்தாண்டு ஜன.6 ஆம் தேதிக்குள் முடிவை அறிவிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.