ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஐபோன் வழங்கிய தனியார் நிறுவனம்

1பார்த்தது
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஐபோன் வழங்கிய தனியார் நிறுவனம்
டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் சேவையை பாராட்டும் வகையில், இந்த தீபாவளிக்கு புதிய 'ஐபோன் 16' போன்களை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அந்நிறுவனம், "எங்கள் நிறுவனத்தில் போட்டியாளர்கள் இல்லை" என குறிப்பிட்டு, உங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது என்று நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அந்நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி