தர்மபுரியில் தனியார் நிதி நிறுவன ஊழியரான அய்யப்பன், தனது 2-வது மனைவியின் பெண் குழந்தையை உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தையின் தாய் ரமணி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்தார். அய்யப்பன் கைது செய்யப்பட்டார்.