தனியார் பள்ளி கட்டணம் குறித்தான கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “தனியார் பள்ளிகளில் என்ன கட்டணம் பெறப்படுகிறது என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம். முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.