டெல்லியில் நடைபெற்று வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில், இன்று (அக்.18) பெங்களூரு புல்ஸ் அணி தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இதில், 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புல்ஸ் அணி தொடரில் முன்னேறி உள்ளது. தொடர்ந்து நடைபெறும் மற்ற ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.