போன் நம்பரால் பிரச்சனை.. அமரன் குழுவிடம் இழப்பீடு கேட்ட மாணவர்

594பார்த்தது
போன் நம்பரால் பிரச்சனை.. அமரன் குழுவிடம் இழப்பீடு கேட்ட மாணவர்
அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில், ஒரு மொபைல் நம்பர் காட்சிப் படுத்தப்படும். நிஜத்தில் அந்த மொபைல் நம்பர் சென்னை பொறியியல் மாணவர் வாகீசன் என்பவருடையதாகும். படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து சாய் பல்லவி நம்பர் என நினைத்து இவருக்கு வரும் அழைப்புகளால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை என அம்மாணவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பட நிறுவனத்திடம் தனக்கு ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி