நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையின் மிக மோசமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு காலத்தில் பார்ட்டி, பப், சரக்கு என்று மிகவும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆனால், இன்று அனைத்தையும் விட்டு விட்டேன். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் பல பிரச்னைகள் வந்தது. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியவர்கள் கூட, என்னை சந்தேகப்பட்டார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது வெளியில் தெரியாது. ஆனால் பெண்கள் செய்யும் ஒரு தவறை இந்த சமூகம் பெரிதாக பேசும்” என்றார்.