கரூர் மாவட்ட திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைந்துக் கொண்டதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. கரூர் திமுக முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் பெ.இரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் மற்றும் முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (நவ., 08) தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.