கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவி, தனது கணவரின் புதிய காருக்கு தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிவகவுடா பட்டீல் - சாவித்திரி தம்பதிக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று (அக்.9) ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சாவித்திரியும் மகன் பிரஜ்வலும் சேர்ந்து சிவகவுடா பட்டீல் வாங்கியிருந்த புதிய காரை தீவைத்து எரித்துள்ளனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.