துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்.9) தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், இதன் மூலம் கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.