தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் தழைத்தோங்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவன் இப்ராஹீம் நபியைத் தனி மனிதராகக் கருதாமல் ஒரு சமுதாயமாகவே அடையாளப்படுத்தியுள்ளார் என்றும், அவருடைய தியாக வாழ்வு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் படிப்பினையாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.