தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று (ஜன.21) இணைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமிழில் வெளியிட்ட பதிவில், “தினகரன் தலைமையிலான அமமுக, NDA கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன். திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்துள்ளனர். தமிழகத்தை, புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருக்கும் NDA கூட்டணியை ஆசீர்வதிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.