சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ள ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை ஆலைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்களின் சார்பாக கருத்து கேட்புக் கூட்டம் இன்று (நவ., 20) நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.