டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னாட் பிளேஸின் இன்னர் சர்க்கிள் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டிருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப்
போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களைக் கலைக்கும் நடவடிக்கையின்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி: சன்நியூஸ்