மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை கோரி DYFI, SFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர். செப்.6-ம் தேதி விளையாடச் சென்ற மாணவர், மறுநாள் அப்பகுதியில் உள்ள குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
நன்றி: நியூஸ்18