சென்னை சேப்பாக்கத்தில் பணி நிரந்தரம், வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பணியாளர்கள் இன்று (ஜன.28) போராட்டம் நடத்தினர். வாழ்வாதாரத்தை உறுதி செய்ய கோரி கண்ணீர் மல்க கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.