தவெகவினரால் தொந்தரவு.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

13பார்த்தது
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் இன்று (பிப்.6) தொடங்கியது. இந்நிலையில், அங்கு குவிந்த நிர்வாகிகளின் வாகன நெரிசலால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அலுவலகத்தை சுற்றியுள்ள சுமார் 13 தெருக்களில் தவெக நிர்வாகிகள் தங்கள் கார்களை சாலைகளிலேயே கண்டபடி நிறுத்தி சென்றதால், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி