மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் பங்குகளிலும், கேஸ் நிறுவனங்களிலும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காலத்தைப்போல மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பரவும் வதந்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது; பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.