தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சமையல் செய்வதை குறைத்து கொள்ளுமாறும், வெயிலில் நீண்ட நேரம் கடுமையான உடற்பயிற்சி அல்லது அதிக உடல் உழைப்பை கோரும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.