சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தனியார் பள்ளிகள் வராதபோதிலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.