
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர்?
சீன அதிபர் ஜி ஜின்பிங், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதிகளில் சீன அதிபர் இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா இடையேயான உறவு, எல்லைப் பிரச்னை மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





























