புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஏப்.9) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில், மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சரான ரங்கசாமி, தனது RX100 பைக்கில் வாக்குச்சாவடி சென்று, வாக்களித்துள்ளார். முன்னதாக நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் RX100 பைக்கில் சென்று வாக்கு செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.