புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

4349பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (பிப்., 12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நிகழாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது. இதனால், அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற முதலமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும், நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கும் அவையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டம் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் நிறைவு கூட்டத்தொடராக இருக்கும்.

தொடர்புடைய செய்தி