காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளியான இன்று நடைபெற்ற 2508 திருவிளக்கு பூஜையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.