காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இன்று தெருவோர வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு காரைக்கால் நகராட்சி ஆலோசனை கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா தலைமையேற்று தெருவோர வியாபாரிகள் எவ்வித தடங்களும் இன்றி வங்கிகள் மூலம் கடன் பெறுவது பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.