காரைக்கால் கேந்திர வித்யாலயா பள்ளியில் வீர மங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட மிஷன் சக்தி குழுவினர் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்வில் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த எழுச்சியூட்டும் உரையுடன் பார்வையாளர்களுக்கு உரையாற்றினார்கள் காரைக்கால் மாவட்டம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.