காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.