காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று (அக்.3) பேராசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னையை முன்வைத்து வகுப்பு புறக்கணித்து கல்லூரி வாயிலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.