காரைக்கால்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்

84பார்த்தது
காரைக்கால்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
காரைக்காலில் அறுவடை செய்யப்பட்ட பருத்திகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் காரைக்கால் சேர்ந்த பருத்தி விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமார் 220 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 7,349ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6,809ம், சராசரி விலையாக ரூ. 7,052க்கும் வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி