காரைக்காலில் சமூகவலைதளங்களில் வரும் வெளிநாட்டு வேலை தொடர்பான விளம்பரங்களை நம்பி பலர் பணத்தை கட்டி ஏமாந்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான விசா, போலியான ஆஃபர் லட்டர் போன்றவற்றை அனுப்பி விசா கட்டணம் என்று பணம் பறிக்கப்படும். இந்த விளம்பரங்களை நம்பி பலர் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கும் மேல் இழந்துள்ளனர். எனவே, இதுபோன்ற மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்று காரைக்கால் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.