காரைக்காலில் மீனவர் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல்

64பார்த்தது
காரைக்காலில் மீனவர் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல்
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேடு சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்பொழுது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் மற்றும் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர் செந்தமிழ் காலில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்து இலங்கையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீனவர் செந்தமிழ் குடும்பத்தினரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி