காரைக்காலில் நல்லாட்சி வாரத்தின் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதம்தோறும் நடத்தப்படும் கிராம வளர்ச்சி திட்டமான "மக்களை தேடி மாவட்ட ஆட்சியர்" நிகழ்ச்சி இன்று (டிச.21) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நிரவி கொமியூன் பஞ்சாயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் காணொளி மூலம் கலந்து கொண்டார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.