புதுவை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கை

64பார்த்தது
புதுவை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கை
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி விசைப்படகை இலங்கை அரசிடம் இருந்து மீட்டுத்தருமாறு புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகனை நேற்று  (டிசம்பர் 25) நேரில் சந்தித்து கிளிஞ்சல்மேடு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு புதுச்சேரி முதல்வரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி