காரைக்கால்: காவல்துறை சார்பில் மீனவர்கள் நல்லுறவு கூட்டம்

80பார்த்தது
காரைக்கால்: காவல்துறை சார்பில் மீனவர்கள் நல்லுறவு கூட்டம்
காரைக்கால் மாவட்ட கடலோர காவல் நிலைய போலீசார், புதுச்சேரி மீன்வளத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராம பஞ்சாயத்தார் இடையிலான நல்லுறவு கூட்டம் கடலோர காவல் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, புதுச்சேரி மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மீனவ பஞ்சாயத்தாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி