காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

408பார்த்தது
காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி:  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காரைக்கால் மாவட்டத்தில் வரும் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 29-ஆம் தேதி சிலைகள் கடலில் கரைக்கப்படும். இந்த நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி