காரைக்கால் கலெக்டர் மாற்றம்

335பார்த்தது
காரைக்கால் கலெக்டர் மாற்றம்
புதுச்சேரியில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் புதிய நியமனங்கள் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரி துணை ஆட்சியர் இஷிதா ரதி காரைக்கால் மாவட்ட ஆட்சியராகவும், புதுச்சேரி மின் திறன் குழுமத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவி பிரகாஷ், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, எழுதுபொருள் அச்சகத் துறை, முன்னாள் படை வீரர்கள் நலப் பிரிவு செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி