நிரவி காவல் சரகத்துக்குட்பட்ட தோமாஸ் அருள் திடல் பகுதியில் மாரியம்மாள் (55) ஜனவரி 24-ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். விசாரணையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. தாயாரின் நகைகள், கைப்பேசி காணாமல் போனதாக மகன்கள் அளித்த புகாரில், கொரடாச்சேரியைச் சேர்ந்த அஜித்குமார் (28) கைது செய்யப்பட்டார். விசாரணையில், மாரியம்மாளை தரையில் தள்ளி கொலை செய்து, நகை, பணம், கைப்பேசியை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார்.